×

இந்திய கிரிக்கெட்... உத்தப்பா ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் உள்பட இந்தியாவில் நடைபெறும் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிரடி பேட்ஸ்மேன்/விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா (36 வயது) அறிவித்துள்ளார். 2007ல் ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற உத்தப்பா, தேசிய அணிக்காக 46 ஒருநாள் போட்டியில் 934 ரன் எடுத்துள்ளதுடன் (அதிகம் 86, சராசரி 25.94, அரை சதம் 6), 19 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்துள்ளார். மேலும், 13 டி20 போட்டியில் 249 ரன் (அதிகம் 50, சராசரி 24.90) மற்றும் 2 கேட்ச் பிடித்துள்ளார். ரஞ்சியில் கர்நாடகா, கேரளா, சவுராஷ்டிரா அணிகளுக்காகவும் ஐபிஎல் தொடரில் கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளுக்காகவும் விளையாடி உள்ள உத்தப்பா, இனி வெளிநாடுகளில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர்களில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளார். இதற்காக கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழை அவர் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதற்காகவே பல வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு டாடா காட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சுரேஷ் ரெய்னாவும் இவ்வாறு ஓய்வு முடிவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிசிசிஐ-ன் பிடிவாதமான கொள்கை முடிவே காரணம் என வீரர்கள் தரப்பில் அங்கலாய்க்கப்படுகிறது.

Tags : Uthappa , Indian cricket... Uthappa retired!
× RELATED தோனிக்கு பேட்டிங் பிரச்னையில்லை… கீப்பிங்தான்! ராபின் உத்தப்பா பேட்டி